கேரள முதல்வராக நாளை உம்மன் சாண்டி பதவியேற்பு: ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுளள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 72 இடங்களும், கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 68 இடங்களும் கிடைத்துள்ளன. திருவனந்தபுரத்தில் நேற்று மு்ன்தினம் நடந்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் உம்மன் சாண்டி சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உம்மன் சாண்டி தலைலமையிலான அரசு நாளை (18-ம் தேதி) பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் உம்மன் சாண்டி முதல்வராக பொறுப்பேற்கிறார்.
உம்மன் சாண்டி உள்பட மொத்தம் 21 பேர் கொண்ட மந்திரி சபை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் யார், யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று இன்னும் முடிவாகவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 7 கட்சிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைத்து கட்சிகளுமே தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
அதுவும் முக்கிய இலாக்காக்கள் வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக முஸ்லீம் லீக்குக்கு 20 எம்.எல்.ஏ.க்களும், கேரள காங்(எம்) கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அமைச்சரவையில் முஸ்லீம் லீக் 5 இடங்களும், கேரள ராங் (எம்) 4 இடங்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவியும் கோரியுள்ளன. குறைந்த மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைந்திருப்பதால் கூட்டணி கட்சிகளி்ன் நிர்பந்தத்திற்கு கட்டுபட வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆட்சி தொடங்கும் முன்பே சிக்கல் தொடங்கிவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications