For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth and Ramadoss
சென்னை: சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், இருக்கும் அங்கீகாரத்தை தக்க வைக்க வேண்டுமானால் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

நம்பர்-1:

கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதோடு, குறைந்தது ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-2:

இந்த வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-3:
கடைசியாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன், அக்கட்சியின் சார்பில் குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நம்பர்-4:

சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே, முதல் இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. மேலும் வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, கடைசி இரண்டு நிபந்தனைகளையும் அக்கட்சி நிறைவேற்றவிலலை.

இதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதுச்சேரி மாநிலத்தில் பாமக தனது அங்கீகாரத்தைஇழந்துவிட்டது. இப்போது தமிழகத்திலும் இழக்கப் போகிறது.

அங்கீகாரத்தை இழந்துவிட்டாலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அந்தக் கட்சிக்கு மாம்பழ சின்னம் தொடர்ந்து ஒதுக்கப்படும். இந்த 6 ஆண்டுக்குள் நடைபெறும் தேர்தல்களில் 4 நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை நிறைவு செய்துவிட்டால் மீண்டும் அக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இல்லாவிட்டால், 6 ஆண்டுகள் முடியும்போது மாம்பழ சின்னத்தையும் பாமக இழந்து, சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

தேமுதிகவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்:

அதே நேரத்தில் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால், அக்கட்சியின் சார்பில்விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற முடியவில்லை.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைதுள்ளன. மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 29 பேர் எம்எல்ஏவாகிவிட்டனர். இதனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதோடு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்படவுள்ளது.

English summary
The Election Commission is going to de-recognize PMK and recognize DMDK in Tamil Nadu based on their performance in the polls and the vote share they got
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X