For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார் மமதா பானர்ஜி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 34 வருட காலமாக செங்கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்காளத்தை மாபெரும் வெற்றியுடன் கைப்பற்றியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மம்தா.

அவருக்கு ஆளுநர் எம்.கே.நாராயன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ராஜ்பவுன் ஹவுஸில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 3,200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் மேற்கு வங்காளத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் மமதா பெறுகிறார். அதே சமயம், காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத முதல் அரசை அமைக்கும் பெருமையையும் அவர் பெறுகிறார்.

மமதாவுடன் 44 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. இவர்களில் 37 பேர் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 7 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.

அமைச்சரவையும் பதவியேற்றது. பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் மமதாவும், அவரது அமைச்சர்களும் ரைட்டர்ஸ் பில்டிங் எனப்படும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர். முதல் கேபினட் கூட்டம் மாலை 4 மணிக்கு நடக்கவுள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பதவியிலிருந்து விலகும் முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி மற்றும் அவரது மனைவி மீரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று புத்ததேவ் இந்த விழாவில் பங்கேற்றார்.

மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.

English summary
City’s famous heritage structure -- the sprawling Raj Bhavan House -- is all set to hold the historic oath-taking ceremony of the new state Cabinet under the leadership of Mamata Banerjee on Friday. Mamata Banerjee, the first woman Chief Minister of the state, will take oath of office at 1:01 pm by Governor M K Narayanan. The ceremony will take place on the lawns of the Raj Bhavan. Shortly after taking the oath, Mamata and other ministers will go to the state secretariat, Writers’ Buildings, to formally take charge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X