ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு
பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் மே 30ம் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
1991-96ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி, இந்த வழக்கில் ஆஜராகி வந்த மூத்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவரால் இந்த வழங்கில் ஆஜராகி வாதாட முடியவில்லை. எனவே ஜெயலலிதா சார்பில் வாதாட புதிய வழக்கறிஞர் நியமிக்க கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விசாரணையை மே 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications