புகையிலை எதிர்ப்பு நாளான மே 31ம் தேதி சிகரெட், குத்கா விற்காதீர்-வணிகர் சங்கம்
மதுரை: உலக புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ம் தேதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வணிகர் சங்க பேரவை திட்டமிட்டிடுள்ளது என்று அதன் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ம் தேதியை புகையிலை எதிர்ப்பு நாளாக உலகம் முழுவதும் கடை பிடித்து வருகின்றது.
தமிழ்நாட்டில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இந்த நாளில், புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக எங்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இதற்கு ஆதரவு அளித்து வருகின்றது.
இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ம் தேதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த பேரவை திட்டமிட்டிடுள்ளது.
புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு மட்டுமின்றி அதன் புகை மற்றும் நெடி அருகாமையில் இருப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும், குழந்தைகளையும், பெண்களையும் வெகுவாக பாதிக்கின்றது.
குறிப்பாக பெட்டிக் கடைக்காரர்கள் தான் அதிக அளவில் பான்பராக், குட்கா நெடியும் மற்றும் புகைப்பவர்கள் விடும் புகை சூழ்ந்த நிலையில் இருப்பதால் அவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதில், அதிக லாபம் இல்லை எனினும் வேறு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவே புகையிலை பொருட்களை விற்க வேண்டியதாகிறது என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு வணிகர்களை கேட்டு கொள்கிறேன்.
புகையிலை பொருட்களின் தயாரிப்பால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரு 7 ஆயிரம் கோடி. புகையிலை நோய்களுக்காக செலவிடப்படுவது ரூ 32 ஆயிரம் கோடி. புகையிலை அரக்கன் தினமும் 2500 பேரின் உயிரை பலி வாங்குகின்றான். எனவே, இது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மே 31ம் தேதி ஒருநாள் மட்டும் தங்கள் கடைகளில் பீடி, சிகரெட், பான்பராக், ஹான்ஸ், குட்கா, சாந்தி பாக்கு போன்றவற்றை விற்பனை செய்யாமல் தவிர்க்குமாறு தமிழகத்தில் உள்ள வணிகர்களை கேட்டுக் கொள்கிறோம்.
அன்று புகையிலையின் தீமைகள் குறித்து முக்கிய நகரங்களில் பேனர்கள் வைக்கப்படும். கடைகளில் இன்று புகையிலைப் பொருட்கள் விற்பனை இல்லை என்கிற அறிவிப்பு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும். மனித சங்கிலி இயக்கமும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications