சென்னையிலேயே காஸ்ட்லியானதாக உயர்ந்தது ஸ்டாலின் மகள் நடத்தும் நர்சரி ஸ்கூல்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும் நர்சரி ஸ்கூல்தான் சென்னையிலேயே மிகவும் காஸ்ட்லியானது என்ற பெயரைப் பெற்றுள்ளது.
சென்னை வேளச்சேரியில் முன்பு ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த வீட்டை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலிசெய்து விட்டார். தற்போது அந்த வீட்டில், அவருடைய மகள் செந்தாமரை நடத்தும் சன்ஷைன் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.
நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி பரிந்துரைத்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தில், இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வருடத்திற்கு ரூ. 24,000 கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு.
சென்னையில் உள்ள நர்சரி பள்ளிகளிலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக செந்தாமரையின் பள்ளிக்கூடம் இதன் மூலம் உருவெடுத்துள்ளது. காரணம், வேறு எந்தப் பள்ளிக்கும் இவ்வளவு அதிக கட்டணம் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்துக் கூறிய தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், அதேசமயம், சிலபெரிய தனியார் பள்ளிகளுக்கு, உயர் நிலை வகுப்புகளுக்கு வெறும் ரூ. 4050 கட்டண உயர்வைத்தான் ரவிராஜ பாண்டியன் கமிட்டி அளித்துள்ளது.
ஒரு நர்சரிப் பள்ளிக்கு ரூ. 24,000 கட்டண உயர்வை அளித்துள்ள இந்தக் கமிட்டி, உயர் நிலை வகுப்புகளுக்கு ரூ. 4050 என கட்டணம் நிர்ணயித்திருப்பது மிகவும் பாரபட்சமானது. இது போக்கப்பட வேண்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications