நூற்றுக்கணக்கானோரால் சிதைக்கப்பட்ட கேரள மாணவி-முக்கிய தமிழக அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள்

நூற்றுக்கும் மேற்பட்டோரால் இந்த சிறுமி சிதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுமியின் வாழ்க்கை இப்படி பாலியல் கொடுமைகளுக்குள்ளாக அவரது பெற்றோரே முக்கியக் காரணம். அவர்களை கேரள போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு தங்களது 18 வயது மகளை பலருக்கும் உல்லாசமாக இருக்க அனுப்பி அந்தச் சிறுமியை நாசம் செய்து விட்டனர் இவரது பெற்றோர்.
இந்த வழக்கில் முதலில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்களைப் பிடிக்க கொச்சி போலீஸார் தனிப்படையை அமைத்துள்ளனர். இவர்கள் கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 35 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் தற்போது கேரள மாநிலம் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கேரள தனிப்படை போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
மாணவியை தான் மட்டும் பலத்காரம் செய்ததோடு தன்னோடு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பலருக்கும் மணிகண்டன்,மாணவியை சப்ளை செய்துள்ளார். சுமார் 100 பேர் வரை மாணவியை பலத்காரம் செய்ததாக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் தயாரித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு ரூ. 45,000!
ஒரு நாளைக்கு ரூ.45 ஆயிரம் வீதம் மாணவியின் தந்தை சுதீருக்கு கொடுத்து விட்டு மாணவியை மணிகண்டன் குமரி-கேரள எல்லை களியக்காவிளை கார்கோணத்தில் அமைந்துள்ள தனது சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த பங்களாவில் வைத்துதான் முக்கிய அதிகாரிகள் மாணவியை பலத்காரம் செய்துள்ளனர். அதிகாரிகள் பட்டியலில்,முக்கிய காவல் துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறைஅதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையில் மணிகண்டன் குறித்தும் தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிகண்டனின் வளர்ச்சிக்கு உதவிய செக்ஸ்
சாதாரண காண்டிராக்ட் பணிகளை செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார். தனது வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கிய இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். ஆனால் மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் சினிமா, டி.வி, ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டு. அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
9-ம் வகுப்பு மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து கேரள குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications