விடுதலைப் புலிகளின் பணம் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும்- கேபி

இலங்கை அரசின் கட்டு்பபாட்டில் இருந்து வரும் கேபி அவ்வப்போது எதையாவது கூறி வருகிறார். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரும் பணம் தற்போது யார் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மிகப் பெரிய அளவில் பணம் இருந்தது. அந்தப் பணம் தற்போது யார் வசம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை மீட்டு அதை தமிழ் மக்களின் நல வாழ்வுக்காக செலவிட விரும்புகிறேன். ஆனால் பணத்தை மீட்பது மிகப் பெரிய பணி, சவாலானதும் கூட. இருப்பினும் இதைச் செய்ய நான் விரும்புகிறேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நான் மலேசியாவில் வசித்து வந்தபோது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினேன். ஆனால் அது இப்போது பழைய கதை. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டிய முக்கியக் கடமை நம் முன் உள்ளது என்றார் கேபி.












Click it and Unblock the Notifications