உணவுப் பணவீக்கம் 7.78 சதவீதமாகக் குறைவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் பல்வேறு உணவுப் பொருள்களின் விலைவாசியும் தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் உணவுப் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 18-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 7.78 சதவீதமாக உணவுப் பணவீக்கம் குறைந்துவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் காய்கறிகள் விலை வழக்கத்தை விட 10 சதவீதம் குறைவாக இருந்ததாம். உணவு தாணியங்கள் விலையும் 9.5 சதவீதம் குறைந்துவிட்டதாம்.
இதற்கு முந்தைய வாரம் 9.06 சதவீதமாக உணவுப் பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் டீஸல், கேஸ் விலை உயர்த்தப்பட்டதன் விளைவு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதன் பாதிப்பு எந்த அளவு பணவீக்க புள்ளி விபரங்களில் மாறுதல் ஏற்படுத்தும் என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications