சீமான் மீது விஜயலட்சுமி கூறிய புகார் குறித்து விசாரணை- கமிஷனர் தகவல்

இயக்குநர் சீமான் தன்னுடன் 3 ஆண்டு காலம் நெருங்கிப் பழகியதாகவும், ஆனால் தற்போது தன்னை ஏமாற்றி விட்டதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் பரபரப்பு புகாரைத் தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி.
மேலும், தான் சீமானுடன் குடும்பம் நடத்தியுள்ளதாகவும், மதுரையில் அவருடன் 15 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறிய விஜயலட்சுமி சமீபத்தில் சில போட்டோக்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான் கொடுத்த புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டை அணுகப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் விஜயலட்சுமியின் புகார்களை சீமான் மற்றும் அவரது தரப்பு மறுத்திருந்தது.
இந்த நிலையில், விஜயலட்சுமி கொடுத்த புகார் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம் கேட்டனர்.அதற்கு பதிலளித்த அவர், விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
நித்தியானந்தா குறித்து விசாரணை
இதேபோல நித்தியானந்தா மீது இந்து மக்கள் கட்சி கொடுத்த புகார் குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் கமிஷனர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீதான பாலியல் குற்றங்களை மறைக்க இந்து மதத்தைத் துணைக்கு அழைக்கிறார் நித்தியானந்தா. இதனால் இந்துக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார் கமிஷனர் திரிபாதி.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications