ரூ.35,000 கோடி வருமான வரி திரட்ட இலக்கு: வருமான வரித்துறை ஆணையர் சங்கரன்
நெல்லை: கடந்த ஆண்டு வருமான வரி மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 35 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை வருமான வரித்துறை ஆணையர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
வருமான வரி சட்டம், வருமான வரி பிடித்தம் மற்றும் திரும்ப பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சென்னை வருமான வரித்துறை ஆணையர் சங்கரன் கூறியதாவது,
தமிழகத்தில் 22 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்கின்றனர். 70 ஆயிரம் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றன. கடந்த ஆண்டு வருமான வரி மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டது.
நடப்பு ஆண்டில் ரூ. 35 ஆயிரம் கோடி வருமான வரி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நிறுவனங்களிடமிருந்து டிடிஎஸ் மூலம் ரூ. 12 ஆயிரத்து 448 கோடி திரட்டப்படும். இதுவரை டிடிஎஸ் மூலம் ரூ. 5 ஆயிரத்து 877 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துபவர்கள் சென்னை, கோவை, மதுரை வருமான வரித்துறை அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தகவல் மையங்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இது தவிர இலவச தொலைபேசி மூலமும் 24 மணி நேரமும் தகவல் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 47 இடங்களில் வருமான வரித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
வியாபாரத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் வருமான வரி கணக்கு எண் பெற வேண்டும். பொதுவாக 1,2, 10 சதவீதம் வசூலிக்கப்படும் வரிமான வரி, நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களிடம் 20 சதவீதமாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications