ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்
புதுச்சேரி: சமூக சேவையினால் மனம் கவரப்பட்ட ஜெர்மன் பெண், புதுச்சேரி போலீஸ்காரரின் மகனை இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் கணேசன். எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை காவலராக உள்ளார். அவரது மகன் கார்த்திகேயன் (29). அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியில் உள்ள பேபி சாரா அனாதைகள் இல்லத்தில் செயலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பேபி சாரா இல்லத்தில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த தீமேத்தேயுவின் மகள் லூயிசா (24) புதுச்சேரியில் படித்து வந்தார். அப்போது, கார்த்திகேயனின் சமூக சேவை பணிகளை கண்டு கவரப்பட்ட லூயிசா, அவரை காதலிக்க ஆரம்பித்தார். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து கார்த்திகேயன், சில நாட்கள் ஜெர்மனி நாட்டிற்கு சென்று லூயிசாவின் பெற்றோரை சந்தித்து பேசினர். முடிவாக, நேற்று புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த லூயிசா தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி பட்டு சேலை உடுத்தி, விபூதிப் பொட்டு வைத்து மணக் கோலத்தில் வந்தது, கோயிலுக்கு வந்தவர்களை ஆச்சரியத்திற்குள்ளாகியது. திருமண விழாவில் மணமகள் லூயிசாவின் உறவினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications