For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாதா? அப்படிச் சொன்னவரை அழைத்து வாருங்கள்: அழகிரி

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருக்கும் திமுக நிர்வாகிகளை மத்திய அமைச்சர் மு. க. அழகிரி நேரில் சந்தித்து பேசினார். திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என்று கூறியவரை தன்னிடம் அழைத்து வருமாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

நில மோசடி, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகளில் சிக்கி ஏராளமான திமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மத்திய சிறையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், சௌந்திர பாண்டியன், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட சிலர் உள்ளனர்.

இந்நிலையில் திருச்சி சிறைக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வந்தார். அங்கு அவர் வீரபாண்டி ஆறுமுகம், அனிதா ராதாகிருஷ்ணன், சௌந்திரபாண்டியன், சேகர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியில் வந்த அழகிரி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் காரில் ஏறினார். இருப்பினும் அவரை விடாது தொடர்ந்து சென்ற செய்தியாளர்கள் திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாதாமே? என்று கேட்டனர்.

அதற்கு அவர் யார் சொன்னது? சொன்னவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.

English summary
Central minister MK Azhagiri had visited the DMK functionaries who are kept in Trichy central prison. When he came out reporters asked him about DMK avoiding Trichy byelection. He asked the reporters to bring the person who said so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X