வாய் பேச முடியாத பெண் பலாத்காரம் செய்து படுகொலை
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் வாய் பேச முடியாத பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பால்தாய், வாய் பேச முடியாதவர். இவர் வெற்றிவேலுக்கு 2வது மனைவி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன்- மனைவிக்கு இடையே கருதது வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 1 வருடமாக இருவரும் பிரித்து வாழ்ந்து வருகின்றனர். பால்தாய் தனது குழந்தைகளுடன் காமராஜர்புரத்தில் வசித்து வந்தார். கட்டிட தொழிலுக்கும் சென்று வந்தார்.
நேற்றிரவு பால்தாயின் குழந்தைகள் அப்பகுதியில் பால்தாயின் தாய் அற்புத மணி வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டனர். பால்தாய் மட்டும் தனியாக அவரது வீடடில் படுத்து தூங்கினார். இன்று காலை அற்புதமணி தனது பேத்திகளை அழைத்து கொண்டு பால்தாய் வீட்டிற்கு வந்தார்.
அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது பால்தாய் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அற்புதமணி, குழந்தைகள் கதறி அழுதனர். உடனே இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பால்தாயின் கழுத்து சேலையால் நெறிக்கப்பட்டிருந்தது.
இதனால் பால்தாயை யாராவது மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications