மோசடி வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை!

ஏட்டு முதல் எஸ்பி வரை 8 காவல்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி.
போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று பின்னர் அவர் விடுதலையானார்.
இந் நிலையில் இவர் மீது 5 ஆண்டுகளுக்கு முன் நகை மோசடி வழக்கை சிபிஐ பதிவு செய்தது. கோவையைச் சேர்ந்த முருகவேல் (இவர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனர்) என்பவர் தந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜெயலட்சுமி 75 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிவகாசி ஜெயலட்சுமி, அவரது தம்பி சீனிவாசன் உட்பட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி கதிரவன் உத்தரவிட்டார். ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளில் இருந்து விடுதலை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பையொட்டி இன்று காலை சிவகாசியில் இருந்து ஜெயலட்சுமி மதுரை நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
முன்னதாக நேற்றும் இந்த வழக்கில் ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரை படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கை போட்டோகிராபர்களை திட்டித் தீர்த்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications