For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன-அதிமுக அரசு மீது பிரேமலதா புகார்

By Chakra
Google Oneindia Tamil News

Premalatha Vijayakanth
சென்னை: வேனுக்குள் உட்கார்ந்து பேசியவர்கள் (ஜெயலலிதா) எல்லாம் இப்போது வெளியே வருகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில், முதலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தேமுதிக தான். உள்ளே உட்கார்ந்தவங்க எல்லாம் இப்போ வெளியே வராங்க. வேனுக்குள் உட்கார்ந்து பேசியவர்கள் இப்போது வெளியே வருகிறார்கள்.

ரேஷன் கடைகளில் தரமான அரசியை வழங்க வேண்டும். இலவச அரிசி தேவையில்லை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசு கேபிள் டிவி என்று ஒன்று போட்டார்கள். கலைஞர் டிவி தெரிந்தது, கேப்டன் டிவி தெரிந்தது என்று சொன்ன மக்கள், இப்போது எந்த டிவியும் தெரியவில்லை. ஜெயா டிவி மட்டும் தெரிகிறது என்கிறார்கள். அரசு கேபிள் டிவி என்பது மக்களுக்காக வழங்கப்படுவது. அதில் பாரபட்சம் காட்டக் கூடாது.

தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இலவசங்கள் கிடைக்கும் என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார் பிரேமலதா.

English summary
The Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), has lashed out at the ADMK government for its handling of the law and order situation in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X