For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முரசு சின்னம் அழிப்பு- தேமுதிக முற்றுகை- வண்டி முன் படுத்து திமுக போராட்டம்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் தேமுதிகவினரின் சின்னம் அழிக்கப்பட்டிருந்ததால் தேமுதிகவினர் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அவர்களை எதிர்த்து திமுகவினர் வாகனம் முன்பு படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து திமுக வேட்பாளர்கள் 2 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதல் கட்ட தேர்தலின்போது, சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி தலைவர் நேற்று நடந்தது. 6-வது, 7-வது வார்டுகளுக்கான வாக்குபதிவு முல்லைவாடி நகராட்சி தொடக்க பள்ளியில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும், ஏஜெண்டுகள் முன்னிலையில், வாக்குபதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கும் பணி நடந்தது.

அப்போது, வாக்கு பதிவு எந்திரத்தில் இருந்த தே.மு.தி.க. வேட்பாளர்களின் சின்னம் அழிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த தே.மு.தி.க.வை சேர்ந்த ஏஜெண்டுகள் மற்றும் தே.மு.தி.க. நகர்மன்ற தலைவர் வேட்பாளர் மாது தலைமையில் நகர செயலாளர் சோலை சந்திரன், விஜய பாஸ்கர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாக்குசாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களுடன் தேர்தல் அதிகாரி ராமகிருஷ்ணன், தாசில்தார் லியாகத் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். சின்னம் அழிக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் சமாதானம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து வாக்குபதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாகனம் மூலம் எடுத்து செல்ல தயாரானது. அப்போது அங்கு வந்த முல்லைவாடி பகுதி 6-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தங்கவேல், 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் தலைமையில் தி.மு.க.வினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் வண்டி போக முடியவில்லை.

இதையடுத்து போலீஸார் அவர்களிடம் பேசிப் பார்த்தனர். இதைத் தொடர்ந்து இதனை அடுத்து தி.மு.க. வேட்பாளர்கள் தங்கவேல், சீனிவாசன் மற்றும் கோபால், பாபு, நலச்சக்கரவர்த்தி, தேவராஜ், சங்கர், சரவணன், சீனிவாசன், முனியப்பன், மணிவண்ணன் உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

English summary
Athur police arrested 11 DMK men including 2 candidates for obstructing the duty of election staffs. Later they were produced in court and then lodged in jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X