திருச்சி மேற்குத் தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை-வெல்லப் போவது பரஞ்சோதியா, கே.என்.நேருவா?

அக்டோபர் 13ம் தேதி திருச்சி மேற்குத்தொகுதியில், இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் உள்பட 16 பேர் போட்டியிட்டனர்.
பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழு ஈடுபடவுள்ளது.
ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் வாக்குப்பதிவு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் காலை 6 மணிக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். வாக்கும் எண்ணும் இடத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக தமிழக போலீஸார், 2-வது ஆயுதப் படை போலீஸார், 3-வது மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார் ஆட்சியர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications