For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடாபியின் உடல் ரகசிய இடத்தில் புதைப்பு!

By Chakra
Google Oneindia Tamil News

Gaddafi
திரிபோலி: அமெரிக்கா தலைமையிலான நேடோ உதவியோடு புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் உடல் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டது.

கடாபியின் உடல் கடந்த சில நாட்களாக மிஸ்ராட் நகரில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சின் இறைச்சிக் கூடத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சர்வதேச அளவில் கண்டனமும் எழுந்தது.

கடாபியின் உடலை தாங்கள் சார்ந்த லிபிய பழங்குடியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை இடைக்கால லிபய அரசு ஏற்கவில்லை. இந் நிலையில் கடாபியின் உடலை லிபிய ராணுவத்தினர் திடீரென அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

பின்னர் அவரது உடல் ரகசிய இடத்தில் இஸ்லாமிய முறைப்படி புதைக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. அவர் புதைக்கப்பட்ட இடம் ரகசியமாகவே வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடாபியுடன் கொல்லப்பட்ட அவரது மகன் முட்டாசிம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்துல் பக்ர் யூனிஸ் ஜபேரின் உடலும் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Muammar Gaddafi's body has been buried in secret after being displayed in public, in an ignominious end for Libya's longtime ruler. A Misrata military council member said Gaddafi was buried in a religious ceremony, along with another of his sons, Mutassim and former defence minister Abu Bakr Yunis Jaber.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X