ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: வாக்குச்சீட்டை முழுங்கியதாக அதிமுக வேட்பாளர் மீது திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் வாக்குச்சீட்டை மென்று விழுங்கிவிட்டதாக திமுகவினர் புகார் கூறினர்.

நாகப்பட்டினம் ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் நேற்று ஒன்றியக் குழு அலுவலக அவைகூடத்தில் நடந்தது. அதில் அதிமுக சார்பில் தங்க. கதிரவனும், திமுக சார்பில் ராசேந்திரனும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கையில் திடீர் என்று அங்கிருந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அதிமுக வேட்பாளரான தங்க. கதிரவன் வாக்குச்சீட்டை மென்று விழுங்கிவிட்டதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளே தகராறு நடப்பதைப் பார்த்து அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த அதிமுக மற்றும் திமுகவினர் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்து தகராறு செய்தனர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+