பூனை இளைத்தால் எலிகூட மச்சான் முறை கொண்டாடும்-வைகோவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் என்று கூறியுள்ளதைப் பார்க்கும்போது வைகோ இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது. என்ன செய்வது, பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழியாயிற்றே என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அமைச்சரவை மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று திமுக ஆட்சியில் கடைப்பிடித்த முறையைச் செய்தியாளர்களிடம் வைகோ வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
நான் அப்போது செய்ததையும், இப்போது சொன்னதையும் அவர் நினைவூட்டிய போதிலும், என்னையும் ஜெயலலிதாவையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறி ஆத்திரத்தைக் கக்கியிருக்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
திமுகவுக்கு ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கைவிட்ட ஜெயலலிதாவும் வைகோவுக்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் தெரிகிறார்கள் என்றால் அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
பூனை இளைத்தால் எலிகூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா என்று அவர் சாடியுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications