சொத்தை விற்று கட்சிக்காக உழைத்தவன் நான், இதற்கு மேல் என்ன சொல்ல?- வேல்முருகன்
சென்னை: கட்சிக்காக சொத்தையெல்லாம் விற்று உழைத்தவன் நான்.இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை என்று தனது நீக்கம் குறித்து முன்னாள் பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் கூறியுள்ளார்.
பாமகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வேல்முருகனிடம் கருத்து கேட்டபோது அவர் கூறுகையில், எனக்கு 15 வயதாக இருக்கும், வன்னியர் சங்கத்தில் இணைந்து அதன் மூலம் அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவன் நான்.
எனது கடுமையான உழைப்பாலும், கட்சித் தலைமையிடம் நான் விசுவாசமாக இருந்ததாலும் மாநில இணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வரை உயர்ந்தேன். எனது கடுமையான உழைப்பு மட்டுமே எனது உயர்வுக்குக் காரணம்.
பலமுறை கட்சிக்காக பல வழக்குகளை சந்தித்துள்ளேன். எனது சொத்துக்களையெல்லாம் விற்று கட்சிக்காக உழைத்தேன். இதற்கு மேல் நான் எதையும் பேச விரும்பவில்லை.
எனது நிலை குறித்து உரிய முறையில் விளக்கம் கேட்கப்படவில்லை, அதற்கான வாய்ப்பையும் தரவில்லை. எனது நீக்கம் குறித்து எனக்கு இதுவரை தகவல் தரப்படவில்லை என்றார் வேல்முருகன்.
கருணாநிதியின் மனம் கவர்ந்தவர்
வேல்முருகனின் சுறுசுறுப்பும், அவரது கடுமையான உழைப்பும், பாமகவினரை விட திமுக தலைவர் கருணாநிதிக்குத்தான் அதிகம் பிடிக்கும். வேல்முருகனை நேரிலேயே பாராட்டியவர் கருணாநிதி. அவரது செயல்திறன் காரணமாக கருணாநிதியின் பிரியத்துக்குரிய பாமக தலைவர்களில் ஒருவராக வேல்முருகன் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications