பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் ஜெ. மனு- விசாரிக்க நீதிபதி மறுப்பு

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அக்.20 மற்றும் 21-ம் தேதிகளில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கேற்ப பெங்களூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி நீதிபதி எழுப்பிய 567 கேள்விகளுக்கு பதில் அளித்தார் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மீதமுள்ள கேள்விகளுக்காக வருகிற 8ஆம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒருமுறை ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நான் ஆஜர் ஆனேன். மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு மீண்டும் ஆஜராகுமாறு கேட்பது உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.
கடந்த முறை ஆஜரானபோது 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ளது. நேரில் ஆஜராகாமல் எழுத்து மூலம் விளக்கம் அளிக்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதில் ஒரு நீதிபதியான டி.எஸ்.தாகூர் தான் விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications