For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை காரணமாக வாக்காளர் பெயர் சேர்க்கை 3 நாள் நீட்டிப்பு: பிரவீண்குமார் அறிவிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வாக்காளர் பெயர் சேர்க்கும் பணி வரும் 11ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1-1-2012 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்து வருகின்றனர். இதற்கான பணி நேற்றுடன் (8ம் தேதி) நிறைவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண்குமார் உத்தரவிட்டுள்ளார். வரும் 11ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் மாற்ற படிவம் 8 ஏ அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

English summary
Tamil Nadu CEO Praveen Kumar has announced that the time to include names and make changes in the voters list is extended for another 3 days till november 11. This time extension is given because of heavy rain in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X