For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-விசாரணை நாளை ஆரம்பம்!

By Chakra
Google Oneindia Tamil News

Raja and Kanimozhi
டெல்லி: மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரணை நாளை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

2ஜி விவகாரத்தை விசாரிப்பதற்கென்றே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இவர்கள் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிபதி சைனி கூறிவிட்டதையடுத்து விசாரணை ஆரம்பமாகவுள்ளது.

இந்த வழக்கில் 150 பேரை சிபிஐ சாட்சிகளாக சேர்ந்துள்ளது. இதில் முதல்கட்டமாக 28 சாட்சிகளிடம் நவம்பர் மாதத்தில் விசாரணை நடத்துமாறு சிபிஐ கோரியுள்ளது.

இவர்களில் சேதுராமன், சுப்பிரமணியம் உள்ளிட்ட அனில் அம்பானியின் தீருபாய் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகளும், எடிசலாட் டிபி டெலிகாம் அதிகாரியான வினோத் குமார் புத்திராஜா ஆகியோரும் அடக்கம்.

English summary
The much-awaited trial in the 2G spectrum allocation scam case, involving high-profile accused including former Telecom Minister A Raja, DMK MP Kanimozhi, top corporate honchos and telecom firms, is likely to commence from tomorrow before a Delhi Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X