இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகளில் கலாநிதி மாறன் மனைவி முதலிடம்!

ஆண் நிர்வாகிகளில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். 2வது இடத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார்.
பார்ச்சூன் இதழ், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் நவீன் ஜின்டாலும், பெண்கள் பிரிவில் காவேரி கலாநிதி மாறனும் முதலிடத்தில் உள்ளனர்.
காவேரியின் சம்பளம் ரூ. 64.4 கோடி
காவேரி கலாநிதி மாறன் இந்தியாவின் பத்து அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சன் டிவியின் இணை நிர்வாக இயக்குநர் ஆவர். இவரது வருடாந்திர சம்பளம் ரூ. 64.4 கோடியாகும்.
2வது இடத்தில் இருப்பவர் பெனின்சுலா லேன்ட் நிறுவனத்தின் தலைவர் ஊர்வி பிரமாள். 3வது இடத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டி இருக்கிறார். 4வது இடத்தில் பிரிட்டானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீதா பாலி இருக்கிறார்.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். இவரது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 69.7 கோடியாகும்.
கலாநிதிக்கு 2வது இடம்
2வது இடம் கலாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது. கலாநிதி மாறனின் ஆண்டு வருமானம், 64.4 கோடியாகும். அதாவது இவரும் மனைவி காவேரியும் ஒரே சம்பளம் வாங்குகின்றனர். கடந்த 2010-11ல் கலாநிதியின் சம்பளம் 73.68 சதவீதம் அதிகரித்துள்ளது. டிவி சானல்கள், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை உள்ளிட்ட பல பிசினஸ்களில் ஈடுபட்டுள்ளார் கலாநிதி மாறன். இவரை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை தென்னிந்தியாவின் தொலைக்காட்சி ராஜா என்று வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதிக்கு 2, காவேரிக்கு 3
ஒட்டுமொத்த இந்திய சிஇஓக்கள் பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில் கலாநிதி மாறன் 2வது இடத்திலும், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் 3வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள்
இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் அல்லது நிர்வாகிகள் பட்டியலையும் பார்ச்சூன் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார். 2வது இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான ஷிகா சர்மாவும், 3வது இடத்தில் டபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனும் உள்ளனர். 4வது இடத்தில் காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி அருணா ஜெயந்தி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications