For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 ஐ.ஜிக்கள், 8 டி.ஐ.ஜிக்கள், 12 எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் 3 ஐ.ஜிக்கள், 8 டி.ஐ.ஜிக்கள், 12 எஸ்.பிக்கள் என மொத்தம் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் (உள்துறை) ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவு:

(அடைப்புக் குறிக்குள் அவர்கள் வகித்த பழைய பணி விவரம்):

மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை கண்காணிப்பு அதிகாரியாக கே.வன்னியபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். (மேற்கு மண்டல ஐ.ஜி.)

மத்திய மண்டல ஐ.ஜியாக கே.சொக்கலிங்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். (சேலம் மாநகர கமிஷ்னர்)

சேலம் மாநகர கமிஷ்னராக கங்கு சரண் மாஹாலி நியமிக்கப்பட்டுள்ளார் (மத்திய மண்டல ஐ.ஜி.)

திருநெல்வேலி சரக டிஐ.ஜியாக ஆர்.எஸ்.நல்லசிவம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் (சென்னை பெருநகர போலீஸ் உளவுப் பிரிவு இணை கமிஷனர் )

மதுரை சரக டி.ஐ.ஜியாக கே.என்.சத்தியமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். (எஸ்.பி.சி.ஐ.டி.- டி.ஐ.ஜி.)

சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜியாக வினித்தேவ் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார் (விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.)

சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜியாக வி.ஏ.ரவிகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் (தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.)

திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜியாக எம்.ராமசுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார் (வேலூர் சரக டி.ஐ.ஜி.)

சென்னை காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.ஐ.ஜியாக பி.பாலநாகதேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் (கோவை சரக டி.ஐ.ஜி.)

வேலூர் சரக டி.ஐ.ஜியாக பி.சக்திவேலு நியமிக்கப்பட்டுள்ளார் (சென்னை பெருநகர காவல்துறை தெற்கு மண்டல போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர்)

கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜியாக எச்.எம்.ஜெயராம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் (சென்னை பெருநகர காவல்துறை வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவுப் இணை ஆணையர்)

இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.பிக்கள்:

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சேவியர் தன்ராஜ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி, எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சி.ஐ.டி., சிறப்பு பிரிவு-2 எஸ்.பி. அண்ணாதுரை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாகவும், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியன், சென்னை சி.ஐ.டி. சிறப்பு பிரிவு எஸ்.பியாகவும்,

சென்னை சி.ஐ.டி. எஸ்.பி. லட்சுமி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாகவும், வேலூர் மாவட்ட எஸ்.பி. ஏ.ஜி. பாபு, திருச்சி ரயில்வே எஸ்.பியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி. கயல்விழி வேலூர் மாவட்ட எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே எஸ்.பி. தமிழ் சந்திரன் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாகவும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பட்டாபி , போலீஸ் பயிற்சி மையம், சென்னை எஸ்.பியாகவும்,

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சந்திரசேகரன், நாகை மாவட்ட கடற்கரை பாதுகாப்பு பிரிவு எஸ்.பியாகவும், சென்னை சி.ஐ.டி., சிறப்பு பிரிவு-1 எஸ்.பி. சரவணன், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாகவும், மதுவிலக்கு பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன், சென்னை சி.ஐ.டி. சிறப்பு பிரிவு-1 எஸ்.பியாகவும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு மேற்கு ரேஞ்ச் எஸ்.பி. ஆசியம்மாள், மதுரை மதுவிலக்கு பிரிவு எஸ்.பியாகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

English summary
Tamil Nadu government has transferred 3 IGs, 8 DIGs and 12 SPs in the state. According to Home Secretary Rameshram Mishra, the transfers and postings will take immediate effect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X