For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் மீன்பிடிக்க தடை: பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் முறையீடு -டி.ஆர்.பாலு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய-இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது குறித்து நாளை(28ம் தேதி) பிரமதர் மன்மோகன் சிங்கிடம் முறையிடப் போவதாக திமுக எம்.பி. டி. ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய இலங்கை கடல் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள குறிப்பிட்ட கடல் பகுதியினை, மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவிக்க ஒப்புதல் அளித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்திய கடலோர காவல்படை பிரமாண பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.

கடலோர காவல்படையினரின் இந்த முடிவு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் என்பதால், கருணாநிதி ஆணைப்படி திமுக எம்.பி.க்கள் 28ம் தேதி பிரதமரை சந்தித்து இப்பிரச்சினை குறித்து முறையிடுவதோடு, உரிய முடிவுக்காக பாராளுமன்றத்திலும் குரலெழுப்ப முடிவு செய்துள்ளோம், என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK MP TR Balu has told that DMK MPs are going to PM Manmohan Singh over the ban on fishing in Indo-Sri Lankan sea border tomorrow. They have planned to raise this issue in the parliament also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X