ஜோராக தயாராகும் 'எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்

தமிழ்நாட்டில் 6,596 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ 17000 கோடி வரை வருமானம் வருகிறது. இதனை ரூ 20000 கோடியாக்க தமிழக அரசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக 20 கடைகளைத் திறக்கிறது.
இவைகள் ஒருபுறமிருக்க, வெளிநாட்டு மதுவகைகளை விற்பதற்காக, டாஸ்மாக் எலைட் ஷாப் என்ற பெயரில் புதிய மதுபான கடைகள் திறக்கப்படவுள்ளன.
இவற்றில், விலை உயர்ந்த விஸ்கி, ஒயின், பீர் வகைகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலைட் ஒயின் ஷாப் எங்கு, எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதல் கட்டமாக 8 எலைட் ஷாப் திறக்கப்படுகின்றன. சென்னையில் கோடம்பாக்கம், வேளச்சேரி, பாடி (பிரிட்டானியா அருகே) ஆகிய 3 இடங்களில் முதல்கட்டமாக எலைட் ஷாப்கள் திறக்கப்படுகின்றன.
60 வகை மதுபானங்கள்
சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களில் படிப்படியாக தொடங்கப்படும்.
டாஸ்மாக் எலைட் ஷாப்களில், ஜேக் டேனியல் விஸ்கி, ஜே.என்.பி.ரேர் விஸ்கி உள்பட 60 வகை விலை உயர்ந்த மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன.
இதுதவிர பிரபலமான கரோனா, ஸ்ட்ரோஸ் உள்ளிட்ட 60 வகை பீர்களும் விற்கப்படவுள்ளன. டாஸ்மாக்கில் கிடைக்காத டின் பீர்களும் இந்த எலைட் ஷாப்களில் கிடைக்கும்.
எலைட் ஷாப் மதுபான கடைகளில் விஸ்கி, பிராந்தி போன்றவற்றின் குறைந்தபட்ச விலை ஆயிரம் ரூபாயாகும். அதிகபட்ச விலை 3 ஆயிரத்து 500 ரூபாய். பீர் வகைகள் நூறு ரூபாயில் ஆரம்பித்து 185 ரூபாய் வரை விற்கப்படும்.
எலைட் ஷாப்களை அமைக்கும் பணி வேக வேகமாக நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications