For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படப் போவது இன்போசிஸ் தான்: ஆய்வு முடிவு

By Chakra
Google Oneindia Tamil News

Infosys
பெங்களூர்: அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களிலேயே மிக அதிகமாக பாதிக்கப்படப் போவது இன்போசிஸ் தான் என்று தெரியவந்துள்ளது.

சிட்டி குரூப், போரஸ்டர் ஆகிய நிறுவனங்கள் சுமார் 1,000 chief information officers நிலையிலான அதிகாரிகளிடம் நடத்திய சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

போரஸ்டர் நடத்திய சர்வேயில், அடுத்த 12 மாதங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளை 4 சதவீதம் வரை கட்டுப்படுத்த உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் டிசிஎஸ், விப்ரோ, காக்னிசன்ட், எச்சிஎல் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளை அதிகரிக்க இருப்பதும், திட்டங்களை விரிவாக்க இருப்பதும் தெரியவந்துள்ளது.

சிட்டி குரூப் நடத்தியுள்ள சர்வேயில், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டிலேயே, இன்போசிஸ் வாடிக்கையாளர்கள் தங்களது செலவில் 6 சதவீதத்தைக் கட்டுப்படுத்திவிட்டது தெரியவந்துள்ளது. அதாவது, இந்தக் காலாண்டில் வாடிக்கையாளர்கள் மூலம் இன்போசிஸ் நிறுவனத்துக்கு வந்த வருவாய் 6 சதவீதம் குறைந்துவி்ட்டது.

சீனா, மலேசியா, தென் ஆப்பிரிக்காவை நோக்கும் இன்போசிஸ்:

ஐரோப்பாவும் அமெரிக்காவும் கைவிட்டு வரும் நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை அதிகரிக்க இன்போசிஸ் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் சீனா, மலேசியா, தென் ஆப்பிரிக்க ஆகிய நாடுகளுக்கும் குறி வைத்துள்ளது. இத் தகவலை இன்போசிஸ் இணை நிறுவனரான கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்ஸ 2008ம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்த நிலையைவிட இப்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை என்றார்.

அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 10,000 பணியாளர்களை சேர்க்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
IT giant Infosys is shifting its priorities to increase its revenues from the domestic market, as also other developing economies like China, Malaysia and South Africa on the back of slowdown in the US and Europe, a top executive of the company said. "We are shifting our priorities to include more revenues from developing economies like India, China, Malaysia and some other developing markets like South Africa. We want to increase our share from developing markets," Infosys Limited executive co-chairman S Gopalakrishnan told reporters on the sidelines of an event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X