Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை வழிமறுத்து நிறுத்திய சிங்களக் கடற்படைக் கும்பல், 5 மீனவர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படைக் கும்பம் தாக்கி வருவது அன்றாட நிகழ்ச்சியாக விட்டது. இதைத் தடுக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்காமல் உள்ளது. இதுகுறித்து தமிழகத் தலைவர்கள் கேட்டால், நமது மீனவர்கள் எல்லைத் தாண்டிப் போவதால்தானே சுடுகிறார்கள் அடிக்கிறார்கள் என்று வித்தியாசமாக பதிலளிக்கிறார் பிரதமர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் ஊடுறுவும் நமது மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சுடுவதில்லை.அதைபோல நமது கடல் பகுதியில் ஊடுறுவும் பாகிஸ்தான் மீனவர்களை நாமும் சுடுவதில்லை. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தொடர்ந்து ஊடுறுவிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களையும் இந்தியக் கடற்படையும் சரி, கடலோரக் காவல் படையும் சரி சுடுவதில்லை. பிறகு ஏன் இந்திய மீனவர்களை மட்டும் இலங்கை சுடுகிறது, அதை ஏன் மத்திய அரசு தட்டிக் கேட்பதில்லை என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் இதுவரை பதில் இல்லை.

இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர் இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து 702 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த கும்பல் அங்கு வந்தது. தமிழக மீனவர்களை மறித்த அக்கும்பல், ஒரு படகில் ஏறிஅதில் இருந்த ஐந்து மீனவர்களையும் தாககியது.

பின்னர் மீனவர்களின் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை கைப்பற்றி சேதப்படுத்தியது. பின்னர் படகையும் சேதப்படுத்தி விட்டு கிளம்பிப் போனார்கள் அந்த ரவுடிப் படையினர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+