என்ன கொல்லப் பார்க்கிறார்கள்: நீதிபதியிடம் கதறியழுத ஆ.ராசாவின் மாஜி உதவியாளர்
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையிலுள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக சாட்சியம் அளி்த்த அவரது முன்னாள் உதவியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
2ஜி ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி நீதிமன்றத்திற்கு வந்தார்.
அவர் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள டிபி ரியாலிட்டி மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கும் ஆ. ராசாவுக்கும் நெடுங்காலமாக தொடர்பு உண்டு என்றும் அதனால் தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் அந்நிறுவனங்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் முன்னுரிமை காட்டியது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ரேஷன் கார்டு கொடுப்பது போன்று ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக அவர் தான் நீதிமன்றத்திற்குள் வந்தவுடன் அங்கிருந்த ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அழுதார். அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் ஜெய்பிரகாஷ் என்பது தெரிய வந்தது. அவர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகளின் கிளார்க்காக பல வாரங்கள் நீதிமன்ற விசாரணைக்கு வந்து செல்கிறார். ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளரான ஆர்.கே. சந்தோலியாவுடன் பிரகாஷ் அமர்ந்திருந்ததாக ஆச்சாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications