கறுப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்- அசோக் சிங்கால்
தென்காசி: வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களுக்கு வழங்கிட வேண்டுமென அகில இந்திய விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார். குற்றாலத்தில் ஹிந்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குற்றாலம் சித்தேஸ்வரி மவுனசாமி மடத்தில் இந்து விழிப்புணர்வு மற்றும் இந்து பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் அகில இந்திய விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் பேசியதாவது,
பாரத தாயின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். பல நூறு ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் ஆட்சி பொறுப்பை ஓப்படைத்து வி்ட்டோம். இத்தாலி நாட்டு பெண் இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறார்.
இந்துக்களுக்கு உரிமை இல்லை
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்படும் உரிமை இந்துகளுக்கு கொடுக்கப்படவில்லை. இந்துகளை வன்கொடுமை சட்டம் ஒன்றை கொண்டு வந்து ஓடுக்க பார்க்கிறார் சோனியா. ஓழுக்கம், பண்பு, நேர்மை, அன்பு, இந்து தர்மத்தில் மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. நம்மை மதத்தின் பெயரில் சாதிகளை வைத்து ஆங்கிலேயர்கள் பிரித்து விட்டனர். இதே நிலை இன்றும் தொடர்ந்தால் இந்து மதம் இருக்கும் தேசம் இருக்காது.
கறுப்பு பணத்தை மீட்கவேண்டும்
அகிம்சையை போதிக்கும் மதமாக இந்து மதம் மட்டுமே உள்ளது. பிற மதங்களில் வன்முறை இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் வாழும் இந்துகள் ஆங்கங்கே தாக்கப்படுவதை தடுப்பதற்கு இந்துகளுக்கு ஒற்றுமை தேவை. மத்தியில் ஆட்சி புரிந்து வரும் காங் அரசு ஊழலின் வடிவாய் திகழ்கிறது. நாட்டில் எங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தியர்களின் பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications