காலாவதியான பூஞ்சை பிடித்த பேரீச்சம்பழத்தில் எண்ணெய் தடவி விற்க முயற்சி- குடோனுக்கு சீல்
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கலாவதியான 2 டன் பேரிச்சம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் உடனடியாக அந்த குடோனுக்கு சீல்வைக்கப் பட்டது.
எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை பகுதியில் போலி பேரிச்சம்பழங்கள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுபாட்டு அலுவலர் டாக்டர் ஜெகதிஸ் சந்திரபோஸ் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள குடோனில் பூஞ்சை படர்ந்து தூர்நாற்றம் விசும் பேரிச்சம்பழங்கள் மீது தேங்காய் எண்ணெய் தடவி பாலிஷ் செய்து போலி லேபிள் வைத்து பெண் தொழிலாளர்கள் பேக்கிங் செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்ததில் அவை காலாவதியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குடோனுக்கு சீல்
இதையடுத்து அங்கிருந்த சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 2 டன் பேரிச்சம்பழம் மூட்டைகள் அழிக்க உத்தரவிடப்பட்டது. பேரிச்சம்பழங்களில் படர்ந்துள்ள பூஞ்சைகளை மறைப்பதற்காக தரமற்ற தேங்காய் எண்ணெய் தடவி விற்பதால் அவற்றை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிறு, குடல் சம்பந்தமான நோய்கள் வரும் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications