For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹசாரே குழுவின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்-தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Qureshi
டெல்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்னா ஹசாரே குழுவினரின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரேதம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டசபைகளுக்கு ஜனவரி 28 முதல் மார்ச் 3 வரை தேர்தல் நடக்கவுள்ளது.

இந் நிலையில் தாங்கள் கோரும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், சட்டசபைத் தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என ஹசாரே அறிவித்துள்ளார். அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.

இந் நிலையில், தேர்தல் ஆணையர் குரேஷி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று இதுவரை ஹசாரே குழுவினர் பிரச்சாரம் ஏதும் செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்சியை புறக்கணிப்போம் என்று தான் இதுவரை கூறி வருகின்றனர்.

சட்டரீதியாக இந்த விஷயத்தில் அவர்கள் விதிகள் எதையும் மீறாவிட்டாலும், பின்னால் இது ஒரு பிரச்சனையாலாம் என்று அவர்களிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எல்லோரையும் போல அன்னா ஹசாரே குழுவினரின் செயல்பாடுகளையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்றார் குரேஷி.

உத்தரப் பிரேதம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டசபைகளுக்கு ஜனவரி 28 முதல் மார்ச் 3 வரை தேர்தல் நடக்கவுள்ளது.

English summary
Team Anna's conduct will be monitored during the assembly elections in five states, Chief Election Commissioner S.Y. Quraishi said Sunday, adding that its campaign against a ''particular party'' could become an issue of propriety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X