கேரளாவைக் கண்டித்து பெட்ரோலுடன் மதுரை கோர்ட் உச்சியில் 10 வக்கீல்கள் போராட்டம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவமானப்படுத்தி வரும் கேரள அரசைக் கண்டித்து மதுரை ஒருங்கிணைந்த கோர்ட் கட்டட உச்சியில் பெட்ரோல் பாட்டிலுடன் 10 வக்கீல்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மெயின் பில்டிங்கின் உச்சிக்கு பத்து வக்கீல்கள் இன்று முற்பகலில் பெட்ரோல் பாட்டில்களுடன் ஏறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு நின்றபடி கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதை உதாசீனப்படுத்தி அவமதித்து வருகிறது. இதைக் கண்டித்து நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று கூறினர்.
இதையடுத்து மாவட்ட தலைமை நீதிபதி விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கீழே இறங்கி வருமாறு கூறினார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் வந்து தங்களுடன் பேச வேண்டும் என்று கோரியபடி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவியது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications