For Daily Alerts
Just In
சவூதியில் பெண்கள் உள்ளாடைக் கடைகளில் இனி ஆண்களுக்கு வேலையில்லை!

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அங்குள்ள பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது. இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஆனால் இந்த முறை பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.