விஜய் அலையால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! மாவட்ட வாரியாக ரிசல்ட் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக என இரண்டு பெரிய கட்சிகளும் ஓரம் கட்டப்பட்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகளில் தவெகவின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் மாவட்ட வாரியாக எந்த கட்சி, எந்த மாவட்டத்தில் தங்களை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது? என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன.

சென்னை & மதுரை: திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்த சென்னை மற்றும் மதுரையைத் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெருவாரியான இடங்களுடன் கைப்பற்றியுள்ளது.

Vijay

திமுகவின் சரிவு: பல மாவட்டங்களில் திமுக ஒற்றை இலக்க இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையில் 14 இடங்களைத் தவெகவிடம் இழந்துள்ளது. இது 1991 காலத்தை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்திருக்கிறார். அதேபோல கொங்கு மண்டலத்தில் திமுக அமைச்சர்கள் பலரும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

திருவள்ளூர்: இம்மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் தவெக மற்றும் அதிமுகவிடம் திமுக இழந்திருக்கிறது (தவெக 9, அதிமுக 1).

நாமக்கல்: இங்குள்ள 5 தொகுதிகளையும் தவெக மற்றும் அதிமுகவிடம் திமுக பறிகொடுத்துள்ளது (தவெக 5, அதிமுக 1).

சேலம்: அதிமுகவின் கோட்டையான சேலத்தில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இங்கு அதிமுக 7 இடங்களையும், தவெக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஈரோடு & செங்கல்பட்டு: இந்த இரண்டு மாவட்டங்களிலும் திமுக ஒரு தொகுதியைக் கூடப் பெறவில்லை. தவெக மற்றும் அதிமுக மட்டுமே இங்கு வெற்றி பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் & சிவகங்கை: இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களையும் தமிழக வெற்றிக் கழகமே முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

வேலூர் & ராணிப்பேட்டை: வட மாவட்டங்களின் முக்கியப் பகுதியான இங்கும் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தர்மபுரி & அரியலூர்: தர்மபுரியில் 4 இடங்களை அதிமுகவும், 1 இடத்தை தவெகவும் பெற்றுள்ளன; அரியலூரில் உள்ள 2 இடங்களையும் அதிமுகவே வென்றுள்ளது.

சேலம் வடக்கு, நாமக்கல், ஈரோடு என பல மாவட்டங்களில் சிட்டிங் அமைச்சர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர். இந்த மண்டலத்தில் அதிமுக தனது செல்வாக்கைப் பல இடங்களில் தக்கவைத்துக்கொண்டதுடன், புதிய வரவான தவெக-வும் கணிசமான வாக்குகளைப் பிரித்தது திமுகவிற்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

திருச்சியிலும் திமுகவிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தவெக தலைவர் விஜய் அவர்களிடம் தோல்வியடைந்தார். மத்திய மண்டலத்தில் திமுகவின் பலமாக இருந்த மாவட்டங்களிலும் தவெக ஊடுருவியுள்ளது. திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களில் திமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாகக் குறைந்து, தொகுதிகள் கைவிட்டுப் போயுள்ளன.

தென் மாவட்டங்களிலும் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக மதுரை, தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களில் திமுகவின் கோட்டைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இங்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த வாக்குகள் மற்றும் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி திமுகவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவினாசி (தனி) உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

மறுபுறம் சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிமுக தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேபோல நீலகிரி மாவட்டத்தில் மட்டும் (உதகமண்டலம் தொகுதி) ஒரு இடத்தைப் பாஜக பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+