1991-க்கு பிறகு காட்பாடியில் முதல்முறையாக தோற்ற துரைமுருகன்! 3வது இடத்தில் திமுகவின் ஜாம்பவான்
வேலூர்: 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் தவெக வேட்பாளரிடம் தோல்வி கண்டது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் வேதனையில் உள்ளனர்.
திமுவின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான துரைமுருகன், தனது கோட்டையாகக் கருதப்பட்ட காட்பாடியில் தோல்வியைத் தழுவியுள்ளார். மும்முனைப் போட்டியில் தவெக வெற்றி காட்பாடி தொகுதியில் 10-வது முறையாகப் போட்டியிட்ட துரைமுருகனுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சுதாகர் கடும் சவாலாக அமைந்தார்.

காட்பாடி தொகுதியில் 10 ஆவது முறையாக போட்டியிட்ட துரைமுருகன் 62225 வாக்குகளை பெற்று தவெக வேட்பாளரிடம் தோல்வியை கண்டார். தவெக வேட்பாளர் சுதாகர் 69,868 வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் ராமு 63,998 வாக்குகளையும் பெற்றனர்.
மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஜாம்பவான்: 1991-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு, துரைமுருகன் தனது சொந்தத் தொகுதியில் தோல்வியைச் சந்திப்பது இதுவே முதல்முறை. அதுமட்டுமின்றி, இரண்டாம் இடத்தைக் கூடப் பிடிக்க முடியாமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவின் எழுச்சி: தனது முதல் தேர்தலிலேயே திமுகவின் மூத்த அமைச்சரை வீழ்த்தி, சுமார் 7,643 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சுதாகர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுகவின் கடும் போட்டி: அதிமுக வேட்பாளர் ராமு 63,998 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
காட்பாடியில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த துரைமுருகனின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் தலைமுறை மாற்றம், தவெக-வின் வருகை பழைய அரசியல் கணக்குகளை மாற்றி அமைத்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications