சென்னை ஓபன் 2012-இரட்டையர் பட்டத்தை வென்றது லியாண்டர் பயஸ் ஜோடி
சென்னை: சென்னை ஓபன் 2012 இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செர்பியாவின் டிப்சரவிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற 17வது சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைப்பெற்றது.
இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செர்பியாவின் ஜான்கோ டிப்சரவிக் ஜோடி, இஸ்ரேலின் ஜோனாதான் எல்ரிச், ஆன்டி ராம் ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான முதல் செட்டில் பயஸ் ஜோடி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2வது செட்டிலும் 6-4 புள்ளிகளில் வென்று பட்டத்தை தட்டிச் சென்றது.
ராவோனிச்சுக்கு ஒற்றையர் பட்டம்
இதற்கு முன்னதாக நடந்த ஒற்றையர் பைனலில் கனடா வீரர் மிலோஸ் ராவோனிச், செர்பியாவின் ஜான்கோ டிப்சரவிக் மோதினர். பரபரப்பான ஆட்டத்தில் 6-7, 7-6, 7-6 என்ற கணக்கில் ராவோனிச் வெற்றி பெற்றார். சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த ஒற்றையர் பைனலில் வெற்றிப் பெற்றதன் மூலம் மிலோஸ் ராவோனிச், சென்னை ஓபனை வெல்லும் முதல் கனடா வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வெற்றி குறித்து இந்தியாவின் லியண்டர் பயஸ் கூறியதாவது,
ஒரே நாளில் 2 இறுதிப் போட்டிகளில் பங்கேற்க மனதை ஆயத்தப்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஜான்கோ டிப்சரவிக் 2 இறுதிப் போட்டிகளுக்கும் தனது மனதை தயார்படுத்திக் கொண்டது பாராட்டத்தக்கது. ஒரு தடகள வீரரை போல அவர் களத்தில் விளையாடினார், என்றார்.
சென்னை ஓபனில் பயஸ் ஜோடி இதுவரை 6 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், முதல் முறையாக வேறு ஒரு வீரருடன் இணைந்து பயஸ் தற்போது பட்டம் வென்றுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications