5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கையிடம் இருந்து மீடகக் கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஒரு படகு மட்டும் பழுதாகி நடுக்கடலில் நின்றுவிட்டது.

இந்த தருணத்தை பயன்படுத்தி அங்கு வந்த இலங்கை கடற்படை அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தில் வழ்ககுப் பதிவு செய்து அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.

அவர்களை மீட்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தினர். சமீபத்தில் கூட தமிழகத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பொய் வழக்கு போட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சுமார் 700 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. அவைகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+