புயல் தாக்கிய புதுவையில் 9 பேருக்கு காலரா: சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
புதுச்சேரி: புதுவையில் 9 பேருக்கு காலரா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவையில் குடிநீர் மாசு பட்டுள்ளது. தண்ணீரில் கழிவு நீர் கலந்ததால் வாந்தி,பேதி, மயக்கம் ஏற்பட்டு சிலர் புதுவை அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேருக்கும், ஜிப்மரில் உள்ள 5 பேருக்கும் காலரா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாதிப்பு முதலியார்பேட்டை, பூமியான்பேட்டை பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காலரா மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேலும் காய்கறிகளை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்து உட்கொள்ள வேண்டும். வாந்தி,பேதி, மயக்கம் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
மருத்துவ உதவி தேவைப்படுவோர் 0413 - 2336991 என்ற எண்ணிலும், அவசர சிகிச்சை வேண்டுவோர் 0413 - 2336050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications