தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். முருகையா பாண்டியன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். முருகையா பாண்டியனை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வீடு மற்றும் வீட்டுமனை தேவைகளை பூர்த்தி செய்து வரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் திருமழிசை துணைக்கோள் நகரம், கோயம்பேட்டில் பன்னடுக்கு வணிக வளாகம், அசோக் நகரில் பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பெரிய திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகின்றது.
இதனால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பணி செம்மையாக நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.முருகையா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications