பரமக்குடியில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் ராமேஸ்வரம் ரயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பரமக்குடி: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பெரிய ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.
மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாசஞ்சர் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. ரயில் பரமக்குடியில் நின்றபோது திடீரென ஒரு கும்பல் ஓடி வந்து ரயிலின் கடைசிப் பெட்டியில் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் தீப்பெட்டி பற்றி எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும், போலீஸாரும் விரைந்து வந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications