பசுபதி பாண்டியன் கொலை-பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு, கல்வீச்சு, மறியல்
திண்டுக்கல்: தலித் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை. தென் மாவட்டங்கள் பலவற்றிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நேற்று இரவு திண்டுக்கலில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல்லில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்களும் நிறுத்தப்பட்டன.
இன்றும் கடையடைப்பு, பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது. நகர் முழுவதும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ்கள் எதுவும் ஓடவில்லை, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
பதட்டம் நீடிப்பதால் திண்டுக்கலில் சில தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்து பள்ளிகளை மூடியுள்ளன. இதனால் பல பள்ளிகளில் மாணவ, மாணவியர் வந்து திரும்பிச் சென்றனர்.
மதுரையில் கல்வீச்சு
மதுரையில் ஐந்து பஸ்கள் மீது சிலர் கல்வீசித் தாக்கியதில் கண்ணாடிகள் சேதமடைந்தன.
ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. மானாமதுரை, திருப்பத்தூர், சிவகங்கை உள்பட சிவகங்கை மாவட்டப் பகுதிகளிலும் பஸ்கள் ஓடவில்லை.
ராஜபாளையத்திலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பசுபதி பாண்டியனின் சொந்த ஊரான தூத்துக்குடியிலும் பதட்டம் நிலவுகிறது. அங்கும் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
வன்முறை மூளாமல் தடுக்க போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் அனைத்து தென் மாவட்டங்களிலும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
திண்டுக்கல் - மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சுமார் 8 மணி முதல் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறு.
பசுபதி பாண்டியனைக் கொலை செய்த எதிரிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் சடலத்தை பொது மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திண்டுக்கல் மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி அருகே முருகத்தூரான்பட்டி என்ற இடத்தில் பொது மக்கள் சாலை மறியலில் குதித்தனர். இதனால் இரு மருங்கிலும் வாகனப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை
மதுரை, சிவகங்கை, ராம்நாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பஸ்கள் ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவுக்குப் பஸ் போகவில்லை
செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு அரசு பஸ்கள் சென்று வந்த நிலையில் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications