வடகிழக்கு பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35 பேர் பலி
பெஷாவர்: வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள மார்க்கெட் ஒன்றில் குண்டுவெடித்ததில் 35 பேர் பலியாகினர், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 60 பேர் காயமைடந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதி தாலிபான்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிகம் உள்ள இடம். வடகிழக்கில் அமைந்துள்ள கைபர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது ஜம்ருத் மார்க்கெட். அங்கு எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
நேற்று அந்த மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்கில் இருந்த குண்டு வெடித்ததில் 35 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர். ரிமோட் மூலம் அந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடித்த டிரக்கில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் கைபர்-பக்டுங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பால் அருகில் இருந்த பெட்ரோல் பம்பும், பல வாகனங்களும் சேமடைந்தது. குண்டுவெடிப்பு நடந்தபோது தாலிபான்களுக்கு எதிரான தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த மார்க்கெட் வழியாக சென்றனர் என்று கூறப்படுகின்றது.
அண்மையில் தான் தங்கள் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்தப்போவதாக தெஹ்ரிக்-இ-தாலிபான் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலியாகியுள்ளதாகவும், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications