2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:  மோசமாக கடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட 2 வயது பெண் குழந்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரைத் தேடி வருகின்றனர்.

கடந்த 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் கோமாவில் இருந்த 2 வயது பெண் குழந்தை பாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அது தன்னுடைய குழந்தை என்றும் தெரிவித்தார். குழந்தையை யாரோ கடித்திருந்த தழும்புகளும், கன்னத்தில் இரும்பு கம்பியைக் காயவைத்து இழுத்த தழும்பும், அதனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, தான் தான் கோபத்தில் குழந்தையை கண்மூடித்தனமாகத் தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த குழந்தையின் எலும்பு உடைந்திருந்தது, அதற்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் மூளையில் ரத்தம் கட்டியிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அந்த குழந்தை தற்போது கை, கால்களை அசைக்கிறது. ஆனால் அது உயிர் பிழைக்க 50 சதவீதம் தான் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியே அது உயிர் பிழைத்தாலும் பிறர் உதவியின்றி அதனால் வாழ முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் தான் தலையில் அடிபட்டதாக அந்த பெண் தெரிவித்தார். ஆனால் மருத்துவர்கள் அதை நம்பவில்லை. யாரோ குழந்தையின் தலையை சுவற்றில் வைத்து இடித்திருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

குழந்தையின் தாய் என்று சொன்ன பெண் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தபோது அது ஒரு பெண்கள் தங்கும் விடுதி என்பது தெரிய வந்தது. குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த குழந்தையை தான் தத்தெடுத்ததாக 15 வயது பெண் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரை தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 2 year old baby girl was abandoned at the All India Institute of Medical Sciences' (AIIMS) Trauma Centre on Jan 18. The baby was so badly bruised and battered, is presently fighting for survival. The child, Falak is suffering from severe head injuries and was brought in to hospital in a state of coma. She had human bite marks all over her body and her cheeks appeared to be brandished with a hot iron rod.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற