தமிழக மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது அதிமுக அரசு-இல.கணேசன்

அதிமுகவும், பாஜகவும் நெருங்கி வருவதாக சமீப காலமாகப் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இல.கணேசன் தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இல.கணேசனின் இந்தக் குற்றச்சாட்டானது, தமிழக அரசின் செயல்பாடுள் மோசம் என்று கூறுவதாக உள்ளால் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரையில் நடந்த பாஜக மாநில வக்கீல்கள் அணி செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மக்கள் பெருத்த நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் திமுக அரசை அகற்றி விட்டு அதிமுகவுக்கு வாக்களித்து அதிமுக அரசைக் கொண்டு வந்தனர்.
ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அதிமுக அரசு செயல்படவில்லை. இனால் மக்கள் பெரும் ஏமாற்றத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மின்சாரப் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று அறிவிக்கபப்ட்டது. ஆனால் அதிமுக ஆட்சி வந்த பின்னர் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் அதிகரித்து விட்டது.
தானே புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படவில்லை. மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறி மத்திய அரசைக் காரணம் காட்டி முறையாக புயல் நிவாரண உதவியை வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது.
கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டம் தேச விரோதமானதாகும். இதை இரும்புக் கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications