போலீசுக்கு லஞ்சம்: லண்டனில் சன் நாளிதழ் பத்திரிக்கையாளர்கள் 4 பேர் கைது
லண்டன்: போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் தி சன் நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் உள்பட 4 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோர் லண்டனி்ல் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த சந்தேகத்தின் பேரில் தி சன் நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் கிரஹாம் டட்மேன்(48), எக்ஸிகியூட்டிவ் எடிட்டர் பெர்கஸ் ஷானஹான்(56), செய்தி பிரிவுத் தலைவர் கிறிஸ் பாரோ(42), கிரைம் எடிட்டர் மைக் சுல்லிவன்(42) மற்றும் 29 வயது போலீஸ் அதிகாரி ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் அந்த 4 பத்திரிக்கையாளர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றத்திற்காக கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நியூஸ் இன்டர்நேஷனலின் முன்னாள் தலைவர் ரெபக்கா புரூக்குஸுடன் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெபக்கா 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தி சன் நாளிதழின் ஆசிரியராக இருந்தபோது ஷானஹான் துணை ஆசிரியராக இருந்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு கிரஹாமிற்கு துணை ஆசிரியர் பதவியில் இருந்து நிர்வாக ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்தவர் ரெபக்கா. அதே போன்று கடந்த 2007ம் ஆண்டு கிறிஸ் பாரோவை நியூஸ் எடிட்டரில் இருந்து செய்தி பிரிவு எடிட்டர் ஆக்கியதும் ரெபக்கா தான்.
நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications