For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி கோவிலில் பெண்கள் இறுக்கமான உடை அணிந்து வர தடை: மீறினால் வெறியேற்றம்

By Siva
Google Oneindia Tamil News

Tirupati temple to follow dress code strictly
திருப்பதி: திருப்பதி கோவிலுக்கு வரும் பெண்கள் இறுக்கமான ஆடை அணியக்கூடாது என்றும் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரில் தான் வர வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கடந்த சில ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட்-டி சர்ட், துப்பட்டா இல்லாமல் சுடிதாரில் வருகின்றனர். இனிமேல் இது போன்று ஆடை அணிந்து வந்தால் அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இனி பெண்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரில் தான் வர வேண்டும்.

அதேபோன்று ஆண்கள் லுங்கியில் வரக்கூடாது. கண்டிப்பாக வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணிந்து தான் வரவேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த ஆடைக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது அதை தீவிரமாக அமல்படுத்தவிருக்கிறோம். ஆடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்களை கோவிலில் இருந்து வெளியேற்றுவோம் என்றார்.

திருப்பதியை சேர்ந்த திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள் கூறுகையில், திருப்பதி கோவில் நள்ளிரவு வரை திறந்திருப்பதால் ஏழுமலையானுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை. அதனால் கோவிலை தினமும் இரவு 10 மணியுடன் மூடிவிட வேண்டும். இது குறித்து தேவஸ்தான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.

சமீபத்தில் நடிகை தமன்னா ஜீன்ஸ் உடையில் திருப்பதி கோவிலுக்கு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

English summary
Tirupati devasthanam has decided to follow dresscode strictly. Here after women should come either in saree or in chudi with dupatta. Likewise men should come in dhoti-shirt or in pant-shirt and not in lungis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X